ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கான பள்ளிகளில் தற்போது வரை 20 முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டில் சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நாட்டில் செயல்பட்டு வரும், போகோ ஹராம் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்துவதோடு, குழந்தைகளையும் கடத்திச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத அமைப்பு, குழந்தைகளின் பள்ளிக்கு சென்று, ஆயுதங்களை வைத்து மிரட்டி கடத்துகிறார்கள்.
எனவே, பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். சுமார் 10 லட்சம் குழந்தைகள், தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி, இந்த 2021 ஆம் வருடம், நாட்டில் இருக்கும் பள்ளிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததோடு, 1400 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதாக, யுனிசெப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.