ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி கிடந்தாலும் காஷ்மீர் எல்லை பிரச்சனை என்றும் ஓயாது. எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் தன் உயிரை பொருட்படுத்தாதது நாட்டுக்காக சேவையாற்றி வருகின்றனர். இதேபோல நேற்று காஷ்மீரின் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 7 பேரை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.