ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.