4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இருக்கும் ஷால்குல் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயம் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்வாறு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது பெயர், அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.