Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் நுழைந்து தீவிரவாதிகள் அட்டூழியம்.. குழந்தைகள், செவிலியர்கள் கடத்தல்..!!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து 3 குழந்தைகளையும், 5 செவிலியர்களையும் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் போகோ ஹரம் போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களை கடத்திச்சென்று கைதிகளாக வைத்து அரசாங்கத்தை மிரட்டி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதன்படி நைஜீரியாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நுழைந்து மாணவ, மாணவிகளை கடத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் உள்ள ஷானியா என்ற நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் குழந்தைகளையும், செவிலியர்களையும் கடத்தி சென்றுள்ளார்கள்.

Categories

Tech |