கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நேரத்தில் ஜெர்மனியில் கடந்தாண்டில் இடதுசாரி தீவிரவாதமும், வலதுசாரி தீவிரவாதமும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர் இதனை பெர்லினில் வைத்து உள்நாட்டு உளவுத்துறை ஏஜென்சியின் ஆண்டு அறிக்கை வெளியிடும்போது கூறியுள்ளார்.
இதனையடுத்து வலதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் 10% அதிகரித்துள்ளதாகவும், இதிலிருக்கும் 33,000 பேரில் 40% நபர்கள் வன்முறை எண்ணத்தை கொண்டுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் இடதுசாரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை 34,300 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுடைய வன்முறை செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.