Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் …பிரதமர் மோடியிடம் சரமாரியாக …கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி…!!!

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோர்கத்  நகரில் காங்கிரசின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த இரு தினங்களுக்கு முன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாட்டின் வளர்ச்சி பற்றி வேதனைப்படுவதாக  பேசியுள்ளார். பிரதமர் அசாமின் வளர்ச்சியை பற்றி பேசுவதாக நினைத்தேன், ஆனால் ட்விட்டரில் 22 வயதுடைய பெண்ணின் பதிவை  பேசியிருப்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவர் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கவலை கொள்ளவில்லை .

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டதை பற்றியும், பிரதமர் கண்டுகொள்ளவில்லை . வெள்ளத்தால் அசாம் நீரில் மூழ்கிய போது  பிரதமர் ஏன்  அசாமிக்கு வரவில்லை? பாஜக தேர்தல்  வாக்குறுதியில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு தின சம்பளமாக  ரூபாய் 350 வழங்கப்படும் என்று கூறியது பிரதமர் நிறைவேற்றினாரா? தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தாரா? இவ்வாறு பிரதமர் மோடியிடம் சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளார்.

Categories

Tech |