Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவிலிருந்து நிக்கல் கொள்முதல்…. டெஸ்லா நிறுவனம் செய்த ஒப்பந்தம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நிக்கல் கொள்முதல் செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனமானது, எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் பேட்டரி உருவாக்க இந்தோனேசிய நாட்டிலிருந்து நிக்கல் கொள்முதல் செய்ய சுமார் 500 கோடி டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உலகளவில் இருக்கும் நிக்கல் தாதுவளத்தில் அதிக அளவை இந்தோனேஷியா கொண்டிருக்கிறது.

எனவே தங்கள் நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களையும், பேட்டரிகளையும் தயாரிக்கக்கூடிய ஆலைகளை நிறுவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால், நிக்கல் ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனமானது பேட்டரி தயாரிக்கக்கூடிய நிக்கல் மூலப்பொருளை ஐந்து வருடங்களுக்கு இந்தோனேசிய நாடுகளின் நிறுவனங்களிடம்  கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

உள்நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்காக நிக்கல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பதற்கு இந்தோனேசியா முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |