இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஜடேஜா இரண்டு ட்விடுகளை போட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல் ட்விட்டில் ‘இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு’ என்றும், இரண்டாவது ட்விட்டில் ‘பொய்யான நண்பர்கள் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உங்களை மட்டுமே நம்புவார்கள்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் எதுவும் தெரியாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Categories