Categories
கிரிக்கெட் விளையாட்டு

“‘டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘….! “இதுதான் அல்டிமேட் டெஸ்ட் தொடர்” ….! ஐசிசி அறிவிப்பு …!!!

போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே,   நடந்த டெஸ்ட் தொடர் ,சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது .

கடந்த ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான , போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக அந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால், அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  தொடரை கைப்பற்றியது. இதனால் தற்போது இந்த டெஸ்ட் தொடரை ஐசிசி, அல்டிமேட் டெஸ்ட் தொடராக  அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் போட்டிக்கு முன்பாக  இதுவரை நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த டெஸ்ட் தொடரை அறிவிக்கும்  முடிவை ஐசிசி எடுத்திருந்தது. இதற்காக ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ சேனலின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 15 டெஸ்ட் தொடர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 70 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது.இதில் கடந்த ஆண்டு நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான, போர்டர்-கவாஸ்கர்  டெஸ்ட் தொடர் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது  .

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த 1999 ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கும்  ரசிகர்கள் அதிக  வாக்குகளை செலுத்தியிருந்தனர். இதையடுத்து 2005 ம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, நடந்த  ஆஷஸ் தொடர் மற்றும் 2001 ம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த  டெஸ்ட் தொடரும் ,அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்தான் ,ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று  சொல்லலாம். ஏனெனில் அந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன் பிறகு இந்திய அணியில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலக ,இளம் வீரர்களை கொண்டு இந்த தொடரை  இந்திய அணி சிறப்பாக விளையாடி  கைப்பற்றியது. கடந்த 1988 ம் ஆண்டிற்கு  பிறகு , எந்த ஒரு அணியும்  கபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை  டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதில்லை என்ற சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது,  என்பது  குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |