Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம்” …..! ஒரே ஆண்டில் 50 விக்கெட் …. புதிய சாதனை படைத்த அஸ்வின் ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான  அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் . 

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 3-வது இடத்தைப் பிடித்து  அசத்தினார். தற்போது இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அஸ்வின் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் .அதன்படி இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 44 விக்கெட் கைப்பற்றியுள்ளார் .மேலும் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கைப்பற்றிய 6 விக்கெட்டையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் .

அதேசமயம் 4-வது முறையாக ஒரே வருடத்தில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகிய மூவரும் ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர் .இந்த நிலையில் இந்த ஆண்டும் அஸ்வின் 50விக்கெட் கைப்பற்றியதன் மூலம்                     4 ஆண்டுகளில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் .இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் முத்திரையை பதித்துள்ளார் .

Categories

Tech |