இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,கேப்டனுமான கபில்தேவ் 24 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் .
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது இதில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி கொண்டிருந்தது .அப்போது இங்கிலாந்து அணியின் ஒல்லி போப்பின் விக்கெட்டை இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா அவுட் ஆக்கினார் .இது பும்ராவுக்கு 100 வது விக்கெட்டை ஆகும் .இதன் மூலமாக 24 டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
💯
What a way to reach the milestone! @Jaspritbumrah93 bowls a beauty as Pope is bowled. Among Indian pacers, he is the quickest to reach the mark of 100 Test wickets. 🔥https://t.co/OOZebPnBZU #TeamIndia #ENGvIND pic.twitter.com/MZFSFQkONB
— BCCI (@BCCI) September 6, 2021
இதேபோல முன்னாள் வீரர் இர்பான் பதான் 28 போட்டிகளிலும்,முகமது ஷமி 29 போட்டிகளிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டிகளிலும் மற்றும் இஷாந்த் ஷர்மா 33 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஜஸ்மித் பும்ரா அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்றும் தன்னுடைய பந்துவீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என்றும் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சமீபத்தில் இவரைப் பாராட்டி உள்ளார்.