சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலத்திற்கு வந்துள்ளார். மேலும் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.