Categories
மாநில செய்திகள்

TET தேர்வில் இருந்து….. “இவர்களுக்கு மட்டும் விலக்கு”?….. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு….!!!

2013ம் ஆண்டுக்கு முன்பு டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அறிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் நடத்தப்படும்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேபோல் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதனால் தேர்வு எப்போது நடைபெறும் என்று குழப்பத்துடன் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கு முன்பு டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |