தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூன் 17ஆம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 28ம் தேதியும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories