Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.டெட் exam images க்கான பட முடிவு

இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கும் , ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.பள்ளிக்கல்வித்துறை, அவர்களுக்கான ஊதியத்தொகையை  கருவூலத்துக்கு அனுப்பாமல்  நிறுத்தி வைத்துள்ளது.

Categories

Tech |