Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் இறந்த தாய்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் இறந்த மனவேதனையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்தார். இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் கோபாலகிருஷ்ணனின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக கோபாலகிருஷ்ணன் தனது தந்தை ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். இதனிடையில் தாய் இறந்ததால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |