தாய் இறந்தது கூட தெரியாமல் 2 சிறுமிகளும் அவர் சடலத்துடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 மற்றும் 7 வயதில் 2 சிறுமிகள் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்து போன தனது தாயின் சடலத்துடன் பல நாட்கள் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் நிர்வாகம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமிகளின் தாய் இறந்து இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு பராமரிப்பில் இருக்கின்றனர். இவ்வாறு இறந்த தாயுடன் சிறுமிகள் குடியிருப்பில் எவ்வளவு நாட்கள் இருந்தார்கள் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. எனவே சிறிது நாட்கள் காத்திருந்த பின் சிறுமிகளிடம் இருந்து சாட்சி பெற இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.