Categories
உலக செய்திகள்

தாயை கொலை செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கூடைக்குள் அடைத்த மகன்…. பிரபல நாட்டில் அரங்கேறிய கொடூரம்…!!

அமெரிக்காவில் சொந்த தாயையே கொலை செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கூடைக்குள் அடைத்து பத்திரப்படுத்திய வழக்கில் அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 72 வயதான லூசியா பார்ன்ஸ் என்பவரை அவருடைய மகன் ராபர்ட் பான்ர்ஸ் துப்பாக்கியால் பலமுறை சுட்டு பின்னர் உடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கூடைக்குள் பத்திரப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் ராபர்ட் பார்ன்ஸ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த அடுத்த நாள் லூசியாவின் சகோதரி லூசியா வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று உள்ளார்.

ஆனால் ராபர்ட் அவரை லூசியாவை சந்திக்க விடாமல் துரத்தி அடித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த லூசியாவின் சகோதரி லூசியா வை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லூசியாவின் உறவினர்கள் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் லூசியா வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வந்த போலீசார் ராபர்ட்டிடம் விசாரணை நடத்தியுள்ளனர் அதற்கு ராபர்ட் உரிய அனுமதி இல்லாமல் யாரையும் தனது வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று போலீசார் லூசியாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி போலீசாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது லூசியாவின் உடல் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்து ஒரு கூடைக்குள் அடைக்கப்பட்டு கார் நிறுத்தும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ராபர்ட் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு கூடையை தயார் செய்ததாகவும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படாததால் ராபர்ட் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தரப்பு கூறியுள்ளது.

Categories

Tech |