பேருந்து ஓட்டுநர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரிகதாங்கல் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தியின் தாயார் இருந்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி அமுதா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.