தனது தாய் மற்றும் தந்தைக்கு கலைமாமணி விருது கிடைத்தது குறித்து ஷிவாங்கி நெகழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவாங்கி . தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் . இந்த நிகழ்ச்சியில் இவரும் அஸ்வினும் செய்யும் சிறிய குறும்புகள் மக்கள் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் . இந்த நிகழ்ச்சி மூலம் அதிகளவு பிரபலமடைந்த ஷிவாங்கிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஷிவாங்கியின் தாய் மற்றும் தந்தை இருவரும் கர்நாடக பாடகர்கள் . சந்திரமுகி படத்தில் புகழ்பெற்ற ‘ராரா’ பாடலைப் பாடிய பின்னி கிருஷ்ணகுமார் தான் ஷிவாங்கியின் தாயார் . இந்நிலையில் கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமர் இருவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது . இதுகுறித்து ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வாழ்த்துக்கள் கலைமாமணி கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமர். அப்பா அம்மா இந்த விருது பெற்றது மிகவும் பெருமை ‘ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் .