கன மழையில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளப்பெருக்கினால் சூழ்ந்துள்ளன. இதனையடுத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதிலும் இதுவரை கனமழைக்கு 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த கடுமையான சூழலை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளமானது அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களை பெராசூட் மூலமாக கொடுத்து வருகின்றனர்.