தாய்லாந்து அரசரின் புகைப்படம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் இசையமைப்பாளரும், தன்னார்வலருமான அம்மி கெய்பிபூன்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் அரசராக இருப்பவர் மகா வஜிரலோங்க்கார்ன். இவரது கட்டுப்பாட்டில் தாய்லாந்து ராணுவம் உள்ளது. எனவே மகா வஜிரலோங்க்கார்ன் தனது கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்தை விடுவிக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் அரசரை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
இதனால் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக புகழ்பெற்ற இசை அமைப்பாளரும் தன்னார்வலருமான அம்மி கெய்பிபூன்பனை பாங்காக்கில் உள்ள அயுதயா மாநிலத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அம்மி கெய்பிபூன்பன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபணமாகிவிட்டால் கண்டிப்பாக அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.