தாயை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மறவன்பட்டி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி திலகராணி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் திலகராணி தனது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை பெற்று வெளியே வந்துள்ளார். அதன்பின் இறப்பதற்கு முன்பாக தங்கராசு நிலம் வாங்குவதற்காக ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இருந்திருக்கிறார்.
அந்த நிலத்தை தங்களுக்குத் தர வேண்டுமென முத்த மகன் ஆனந்த் கூறியதற்கு தாய் திலகராணி இடையூறு ஏற்படுத்தி கொடுக்க விடாமல் செய்துள்ளார். இதனை அறிந்த மகன் ஆனந்த் தந்தையை கொலை செய்த கோபத்தில் இருந்த நிலையில் அவரின் சொத்துக்களை தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என சதித்திட்டம் திட்டிய காரணத்தினால் தாயை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அதற்கு பிறகு தாயின் தலையுடன் ஆனந்த் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் நீதிபதி சத்யா ஆனந்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அதன் படி ஆனந்தை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.