மத்திய ஆப்பிரிக்க நாட்டில் புலம்பெயர்வோர் தங்கியிருந்த முகாமில் காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு என்ற பயங்கரவாத அமைப்பு துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 22 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் காரணத்தால் அப்பாவி பொதுமக்கள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு புலம்பெயர்ந்து ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு என்னும் பயங்கரவாத கூட்டத்தை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி உட்பட பயங்கர ஆயுதங்களை கொண்டு அப்பாவி பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களில் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அந்த தாக்குதலில் சுமார் 22 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.