ஈராக்கின் பாதுகாப்பான நகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகே சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பயங்கரவாதிகள் வெடித்த வெடிகுண்டினால் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
ஈராக்கிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத தீவிரவாதிகளை கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியோடு வெளியேற்றியுள்ளது. அதிலிருந்தே பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கின் மிக முக்கிய பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றான பஸ்ராவில் அந்நாட்டு அரசாங்கம் பலத்த பாதுகாப்பை போட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பின்பாக பஸ்ராவில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகே பயங்கரவாத அமைப்பினர்கள் அதி பயங்கர வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.