இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தீப்பிடிக்கும் பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவ படைகள் காசாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும்படியான வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனிய பயிற்சி முகாமிற்கு குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக, ஹமாஸ் போராளிக் குழுவினர்கள் இயக்கிவரும் வானொலி நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தெற்கு இஸ்ரேலில் தீப்பிடிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது கூட்டணி கட்சிகள் புதிதாக ஆட்சியை அமைத்த உடன் நடைபெற்ற முதல் வான்வெளி தாக்குதல் ஆகும்.