ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வெளியேறிய இங்கிலாந்து மருத்துவ மாணவர் ஒருவர் அந்நாட்டில் மக்கள் படும் அவதி குறித்து கூறியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதுடைய மருத்துவ மாணவர் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தின் வாசலில் சுமார் 24 மணி நேரம் காத்திருந்துள்ளார். அதன்பின் அவர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழையும்போது தலிபான் பயங்கரவாதி ஒருவர் மாணவரை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அதாவது உலக நாடுகள் மட்டும் தங்களை கவனிக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய இந்த இங்கிலாந்து பாஸ்போர்ட்டை பார்த்த உடனேயே உன்னை சுட்டு தள்ளி இருப்போம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் விமான நிலையத்திற்கு முன்பாக மக்கள் படும் அவதி குறித்து இந்த மாணவர் கூறியதாவது, தலிபான்கள் 20 வருடங்களுக்கு பின்பும் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் பொது மக்களிடம் கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு 0 சதவீதம் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி விமான நிலையத்தின் முன்பாக இருக்கும் பொதுமக்களில் எவராவது தங்களுடைய பாதையில் குறுக்கே வந்தால் தலிபான்கள் அவர்களை சாட்டையைக் கொண்டு அடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்