ஈராக் நாட்டிலுள்ள கிராமம் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு வீசியும் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
ஈராக் நாட்டில் மக்மூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள அந்த கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டையும் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள்.
இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் ஈராக் நாட்டின் ராணுவ வீரர்கள் உட்பட பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களின் இந்த அதிபயங்கர தாக்குதலால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்திலுள்ளார்கள்.