மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு கிளர்ச்சிப் குழுவினர்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் ஐ.எஸ் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினர்களுடனும், அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் பார்கினோவிலுள்ள லோரோவும் என்னும் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள்.
அவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சார்ந்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த அதிபயங்கர தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் நடத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.