Categories
உலக செய்திகள்

இது பயங்கரவாதத் தாக்குதலா…? விபத்துக்குள்ளான ராணுவ விமானம்…. செய்தி தொடர்பாளரின் முக்கிய தகவல்…!!

85 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளான சம்பவம் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்று பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலா தீவிலிருந்து சி-130 என்னும் ராணுவ விமானம் சுமார் 85 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ராணுவ விமானம் தரையிறங்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டின் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 15 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், அனைவரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து ஒருவேளை பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இந்த கோர விபத்து பயங்கரவாதிகளால் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணை விரைவில் துவங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |