பாக்தாத்திலுள்ள சந்தையில் தற்கொலைப் படையின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலுள்ள சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கூடியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பு இந்த சந்தையில் தற்கொலை படையின் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த அதிபயங்கர தாக்குதலில் சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். மேலும் இது குறித்த தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.