ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையை சீர்குலைக்கும் விதமாக அதிபர் மாளிகை உட்பட 3 இடங்களில் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில் அதிபர் உட்பட 100 க்கும் மேலானோர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென அதிபர் மாளிகையில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இருப்பினும் அதிபர் பக்ரீத் பண்டிகை தொழுகை முடித்துவிட்டு தன்னுடைய உரையை ஆற்றியுள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுகள் தாக்குதல் போன்று 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.