அமெரிக்க விமானப் படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக அமெரிக்க விமானப் படை திடீரென தலிபான்களின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள நிஜ்ரப் என்னும் மாவட்டத்தில் இந்த விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க விமான படையினர்கள் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பி-52 என்னும் ரக விமானத்தின் மூலம் குண்டுகளை வீசி தலிபான்களின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடந்த வான்வெளி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.