Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதமாகும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… இயக்குனர் சிவா எடுத்த அதிரடி முடிவு …!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் .

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா , சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது .

Suriya to team up with Viswasam director Siruthai Siva for a family  entertainer - Movies News

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு படப்பிடிப்பு நடைபெறாது என்றும் தகவல்கள் வெளியானது. இனி அண்ணாத்தா படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் தொடங்கப்படும் என்பதால் இயக்குனர் சிவா அடுத்ததாக சூர்யா படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் . ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைந்ததும் சிவா நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.  இந்தப் படத்தை கே இஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |