Categories
தேசிய செய்திகள்

தாராவியில் 5 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு…!!!

தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் நேற்று அப்பகுதியில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாதரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,175 ஆக உயர்ந்துள்ளது. மாகிமில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,982 ஆக உள்ளது. மேலும் தாராவி, தாதர், மாகிமை உள்ளடக்கிய ஜி வடக்கு வார்டு பகுதியில் தற்போது வரை 6,820 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதில் 5,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Categories

Tech |