சுவிஸில் தாயைக் கொன்ற மகனுக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் Emmenbrücke என்ற பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் பயங்கரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொலையை அப்பெண்ணின் 21 வயதான மகன் செய்துள்ளான். இதனை அவனே போலீசாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளான். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றியதுடன் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து அந்த இளைஞனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவனும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளான். அதில் அவன் கூறியதாவது ” எனது காதில் கேட்ட அசரீரி காரணமாகவே என்னுடைய தாயை கொலை செய்தேன். மொத்தம் அவரை 48 முறை கத்தியால் குத்தினேன். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என்று கூறியுள்ளான். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.