குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகாமையில் அத்திப்பாக்கம் கிராமத்தில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமல்ராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலை, அவரது இரண்டு மகன்களும் ஒரே வீதியில் தனித் தனியே வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் விமல்ராஜ் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றார். இதனையடுத்து விமல்ராஜின் மனைவி ராஜலட்சுமிக்கும் அஞ்சலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் மீண்டும் அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டதில் பெங்களூருவில் இருந்து வந்த விமல்ராஜ் அவரின் மனைவிக்கு ஆதரவாக பேசி அஞ்சலையிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த அவர் தாயென்றும் பாராமல் கையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினாயக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.