கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூர அருகே தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை சாப்பிட மறுத்து கண்ணீர் விடும் சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர அருகே உள்ள மணலி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இந்த கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசம் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக பிறந்த குட்டி யானைக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அந்த குட்டி யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் தாயை பிரிந்த குட்டி யானை இலை, தழைகளை சாப்பிட மறுத்து வருவதுடன் கண்ணீர் விட்டு பரிதவித்தபடி சோகமாக இருந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்து உள்ளனர்