நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்
தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ,தெலுங்கில் நானியுடன் ரங் டே மற்றும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
Love in its purest form! ❤️ @MenakaSuresh4 #LockdownDiaries #OneWithTheMommy #Throwback pic.twitter.com/BBcRZQ9MqN
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 21, 2021
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் . இந்நிலையில் கீர்த்தி தனது அம்மாவுடன் இருக்கும் ஒரு அழகிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ‘தூய்மையான வடிவத்தில் அன்பு’ என்று பதிவிட்டுள்ளார் . கீர்த்திக்கு அவரது அம்மா மேனகா மருதாணி வைத்து விடும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.