Categories
உலக செய்திகள்

19வயது மாணவிக்கு பயிற்சி…! இறுதியில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் பயிற்சியாளர்…!!

அமெரிக்காவில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெற்ற  19 வயது மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் 4 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Kemah என்ற பகுதியை சேர்ந்தவர்  Floyd  Thompson Jr. இவர் ஓட்டப்பந்தய பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.இவரிடம்  19 வயது மாணவி ஒருவர், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்றுள்ளார். அந்த மாணவியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் Floyd  Thompson Jr நெருங்கி பழகியுள்ளார்.  மேலும் சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவர் மாணவியிடம் தவறாகவும்  நடந்துள்ளார்.

இந்நிலையில்தான் பயிற்சியாளர் Floyd  Thompson Jr -ன்  திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் திருமணம் நடந்த பின்னரே மாணவியிடம் தவறாக நடந்து கொண்டது தற்போது  தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் சில மாணவிகள் Floyd  Thompson Jr-ல்  பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஓட்டப்பந்தய பயிற்சியாளருக்கு ஜாமீன் தொகையாக $1,00,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |