Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குட்டீஸ்களின் கவனம் பெறும் மரத்தினாலான விளையாட்டு சாதனங்கள் – தச்சுத் தொழிலாளியின் புதிய முயற்சி…!

கொரோனா ஊரடங்காள் பலர் வேலையிழந்து தவிர்த்து வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமற்றுமின்றி தம்மோடு சேர்ந்த சக தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்க வழி செய்து கொடுத்துள்ளனர்.

தச்சுத் தொழிலாளி ஒருவர். வாழ்வாதாரத்தை இழந்து பலரையும் தவிக்க வைத்துள்ளது கொரோனா. இரந்த காலகட்டத்தில் செய்வதறியாது தவித்து வரும் பலருக்கு மத்தியில் மலையில் புதுமையை புகுத்தி அசத்தி வருகிறார். திண்டுக்கல் இலைஞர் துரைமுருகன். வெறும் விளையாட்டாக மட்டுமின்றி சிறு குழந்தைகளின் கணித அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் இவரது கலைப் பொருட்கள் இருப்பது சிறப்பு. மேட்டுப்பட்டியில் தனது தந்தையின் பிளைவுட் கடையில் போதிய வருமானம் இல்லாததால் மரத்தினாலான பொம்மைகளை செய்து குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வந்துள்ளார் துரைமுருகன்.

பின்னர் அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே மெமரி செஸ், கணித வாய்ப்பாடு என குழந்தைகளுக்குப் பயனுள்ள விளையாட்டுத் சாதனங்களை வடிவமைக்க தொடங்கினார். தற்போது பல தச்சு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளார். நண்பர்களின் ஆலோசனைபடி கலைப்பொருட்களை அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பதிவிட்டார். தற்போது உலகளாவிய சந்தையில் இவரது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவின் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மரத்தினால் செய்யப்பட்ட புதுமையான வடிவமைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பும் இவர்களது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |