Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தட்சிணகாசி கால பைரவர் கோவிலில்…. தேய்பிறை அஷ்டமி வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு நேற்று காலை 108 வகை நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து 1008 ஆகம பூஜைகளும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ அலங்கார சேவையும் மகாதீபாரதனையும் சுவாமிக்கு காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து சுவாமியை வழிபட்டுள்ளனர். அதன் பின் இரவு நேரத்தில் 1008 கிலோ மிளகு மற்றும் 1008 கிலோ மிளகாய் கொண்டு சாமிக்கு யாகம் நடைபெற்று உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுவாமி கோவில் வளாகத்திலேயே வளம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Categories

Tech |