ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை நீக்கி இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளையும் இங்கிலாந்து அரசாங்கம் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரான் சமூகரீதியாக பரவவில்லை என்பதால் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11 நாடுகளின் மீது விதிக்கப்பட்டிருந்த பயண தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளார்.