உகண்டாவில் கொரோனா பரவலை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உகண்டாவில் சீனாவில் முதன்முதலாகத் தோன்றிய கொரோனா தொற்று 10 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அந்நாட்டு அரசாங்கம் நெருங்கி வரும் புத்தாண்டில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க 2 ஆவது வருடமாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி புத்தாண்டின் போது கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு நேரத்தில் வழிபடுவதற்கும் பொதுமக்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.