Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக சிக்கிய… 5,75,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள்…மளிகைக்கடைக்காரர் கைது…..!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலம் மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் உழவர் சந்தை அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர்  சல்சார் பாபு . இவர் வீட்டிற்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் இருந்த ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 5,75,000 மதிப்பிலான 19 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சல்சார் பாபுவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .

விசாரணையில் சல்சார் பாபுவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் என்பதும் அவர்  பெங்களூருவிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |