உலகில் பெரும்பாலான நாடுகள் தடை செய்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திக் கொண்டார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . அதற்க்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்தநிலையில் தற்போது கொராேனா தடுப்பூசிகள் உலகமுழுவதிலும் போடப்பட்டு வருகின்றது மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இறங்கியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு மருந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து கண்டுயறிந்தது .
இந்த தடுப்பூசி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது . அதனை போட்டுக்கொண்டபெரும்பலான மக்களுக்கு ரத்த உறைவு போன்ற பக்கவிளைவு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனால்அந்த தடுப்பு மருந்துக்கு பல்வேறு நாடுகளில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் ரத்த உறைவுபோன்ற பக்கவிளைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் மருந்து ஒழுங்குமுறை ஆணையமும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெரிவித்துள்ளன. அதனால் மீண்டும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் கொராேனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள போவதாக கூறினர் . அதன்பிறகு அவர் பிரிட்டனின் பிரதமர் அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நேற்று போட்டுக் கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட ட்விட்டரில் பதிவில், கொரோனா தொற்று காரணமாக நாம் இழந்துப்போன பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெற்றுக்கொள்ள கொராேனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதுதான் சிறந்த வழி என்று கூறியுள்ளார். மேலும் இந்தத் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.