Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்க தான் வச்சிருக்கேன்…. வசமாக சிக்கிய விற்பனையாளர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேட்டை பகுதியின் அருகாமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவரை விசாரணை செய்த போது புதுக்குப்பம் கிராமத்தில் இருக்கும் உறவினரான ராஜா என்பவர் வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்து அங்கிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இவருடன் இணைந்து சிவமணி, சுரேஷ், ராஜா மற்றும் கதிர்வேல் ஆகிய 4 பேரும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் சிவமணி, கதிர்வேல் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய ராஜா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

Categories

Tech |