Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு சொல்லியும் கேட்கல…. தடையை மீறி வாறாங்க…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் தடையை மீறி உள்ளே நுழைந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடையையும் மீறி ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின்படி தடையை மீறி பழைய பேருந்து நிலையத்திற்குள் நுழையும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் பழைய பேருந்து நிலையத்தில் தடையை மீறி நுழைந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் வேலூர்-ஆற்காடு பேருந்துகள் நிற்கும் பகுதி மற்றும் பேருந்து நிலையத்தின் உள்ளே பயணிகளை ஏற்றியும், பேருந்தில் வந்து இறங்கும் பயணிகளை ஏற்றவும் வந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதத்தை காவல்துறையினர் விதித்துள்ளனர். இவ்வாறு ஒரே நாளில் 106 ஆட்டோக்களுக்கு 500 ரூபாய் வீதம் என 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை ஆட்டோவின் தகுதிச்சான்று புதுப்பிக்கும்போது வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |