விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும். ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் திரு. கடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில அரசின் தடையை மீறி, மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.